நிழலின் இரகசியங்கள் !

கனவொளி 

இமைகள் மூடினேன்

என் கனவுலகம் அடைந்தேன் …..

என்மனம் திரையானது

உந்தன் நினைவுகள் ஒளியானது !

கனவு என்னும் ஏட்டில்

கல்லுக்கும் அழகுண்டு !

மனநினைவுகளுக்கும்  இடமுண்டு !

images

மாலை பொழுதின் இதமான நினைவோலை

இதமான தென்றலுடன்

கவி பேசும் பாடலுடன்

மழை துளிச் சாரலுடன்

மென்மை கொண்ட மனதுடன்

கண்ணில் எஞ்சிய ஈரத்துடன்

கலங்கினேன்

உன் நினைவுகளுடன்  !

burning_skies_by_jerry8448-d3hcf7s

வற்றவைத்த சோலை

எந்தன் கண்ணுக்குள்

உன்னைக்கொண்டேன் …

ஆதலால்

கண்ணீரால் உன்னை நனைக்க

விரும்பாமல்

கண்ணீர் என்னும் அருவியை

அந்நொடியே மறைத்து வைத்தேன்…

little-sad-girl-19311202

பொறுத்தருள்க சற்று கடினமான பாதையாக உணர்ந்தால் !

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தமிழ்
  ஜூலை 12, 2013 @ 15:29:21

  வாழ்த்துகள்.

  இதுவரை எழுதியதில் இது மிகச் சிறப்பான முன்னேற்றமாகப் படுகிறது.
  தளத்தில் பதிவை எப்படி அழகாகக் காட்ட முடியுமோ, அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறீர்கள்.
  கவிதைக்குத் தேர்ந்தெடுத்த படங்களும் குளிர்ச்சி பொருந்தி உள்ளன.

  சின்னச் சின்ன எழுத்துப்பிழைகள், ஒற்றுப்பிழைகளைத் தவிர்த்து சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

  கவிதை எழுதுவதில் எனக்கு அவ்வளவு திறன் இல்லையென்றாலும், சில இடங்களில் வேறு வார்த்தைகள் இருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

  தலைப்புகளில் இன்னும் கொஞ்சம் வசீகரமூட்டலாம்.

  படங்களை இடப்புறமோ, வலப்புறமோ, பத்தி இசைவு (Paragraph align) செய்தால் நலம்.

  சில ஒற்றை வார்த்தைகள் கவிதைக்கான ரம்மியத்தைக் குலைப்பது போல தோன்றுகிறது.

  அடுத்தடுத்த முயற்சிகள் சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கையுடன்.

  அன்பன்,
  தமிழ்

  மறுமொழி

 2. mabig
  ஜூலை 12, 2013 @ 15:37:20

  தமிழ்,

  நன்றி நண்பரே ! உங்கள் ஊக்கத்திர்க்கம் உதவிகளுக்கும் எந்தன் நன்றி 🙂

  மென்மேலும் தவறுகள் திருத்தி நன்கு எழுத பயிற்சித்து கொள்கிறேன் !

  நன்றிகளுடன் ,

  தோழி 🙂

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: