சில வரிகள்…

 

காகிதம் எடுத்த வேளையில்
காற்றினில் பறந்த பொழுது – காற்று கவிதை

விரைந்து கரைக்கோடும்
நண்டுகளை நனைப்பதில் – அலை கவிதை

மலர்கள் மலர்ந்திடும்
சத்தம் கேட்கும் தேனிக்கள் – இசை கவிதை

தூக்கம் வருகையில்
எண்ணங்கள் பலதுயில் எழும் – கனவுகள் கவிதை

என்னில் நீயென சிறு துளிகளாய்
கலந்த முழுவதும் மாற்றினாய் – நீ கவிதை !

96a3e8e87e42ad094a459649bef57414.jpg

 

 

ஒரு நடை….

சின்னதாக ஓர் பயணம்…tumblr_my9zfbfXLv1s4r2kno1_250

சிறுபிள்ளையான நினைவுப் பயணம்…

என்விரல்களை பிடித்து இழுத்துச் சென்ற பயணம்..

என்றும் மறவா மழலை பருவ பயணம்

இன்றும் நினைவில் பயணிக்கும் பயணம் !

மௌனம்=கோபம்

காரணம் இல்லாக் கோபம்….

மௌனம்...

மௌனம்…

பேச விரும்பா நிமிடங்கள்…
கண்கள் சேர் மேகங்கள்…
அலைமோதும் எண்ணங்கள்

கடந்திட கடக்க சில நிமிடமே..
கடக்கும் கணம் ரண கணம் !

வார்த்தை பயணம் !

சில்லரையான நான்கு வார்த்தை images (1)
சத்தத்துடன் அதிக பொருள்

தவிப்புக்கென நிம்மதி வார்த்தை
காத்திருக்க தூண்டும் உற்சாகமும்

வரும்வரையில் நிம்மதியில்லை
வந்தபின்னே வார்த்தையில்லை…

அருகில் இருந்திட ஆசையதிகம்
தொலைந்து செல்வேன் பக்கம் இருந்திட

மேகம் கடக்க சொல்கிறேன் கதைகளை
என் இமைக்குபதில் கசியும் மழையென

பயனத்துடனே நான்கு வார்த்தைகள்
நித்தம் நித்தம் நினைவினில் சுகமே !

காதல் கீதம்

வணக்கம் நண்பர்களே,

                               நான் செய்த ஓர் சின்ன முயற்சி,கருத்துகள் இருந்தால் தாராளமாக கூறலாம் .

 

காத்திருக்கிறாள் ராதை

கண்ணனின் விழிகாண….

மனதின் மயக்கமோ

காதலின் சுவையோ ராதைக்கான ஆவல்

 

மாயக்கண்ணனின் மனமோ

குழலின் கீதத்தில் அவன் காதல் ஏவல்

காத்திருக்கும் நிலவின் பிடியில் கண்ணனின் கண்கள்

இசையின் வடிவிலோ கோதையின் மென்மை

 

தென்றலோடு வீசும் காதல் நேசம்

கண்ணனை கண்ட நொடியோ கண்கள் பேசும்

சிரிப்புடனே அருவியாகும் முத்துக்கள்….

ராதையை வருடும் சிரிப்பிலான கண்ணன் பேச்சுக்கள் ! ….

 krishna_vraja_bhava_by_yogeshvara-d58da94

radha_floral_by_vishnu108-d3igex4 (1)

நனையலாம் மழையில்…

மேகத்தின் குடைக்குள் முதல் நனையல்

மரத்தின் நிழற் கூரைக்கீழ் நிசப்த நனையல்

புள்ளின் நுனிததும்ப விரல் நனையல்

ஜன்னலின் கம்பியோர துளிகள் மழலை நினைவின் நனையல்

குடையோரம் துள்ளும் துளிகள் பிடிக்கும் குறும்பு நனையல்

நெற்றியில் விழும் முதல் துளியின் எண்ணம் குளிர் நனையல்

மழையின்  துளியின் சப்தம் மனதின் ஈர நனையல்

அடுத்த நனையல் என்றே என்று…..காத்திருக்கும் சுகமான

நனையல்…..

umbrellaa

சொல் விளையாட்டு …

ஒரு வரி சொற்களின் விளையாடல்கள் .

 • கண்கள் தூக்கம் கேட்க உன்னை திரையிடுகிறேன் என் கனவிலும் #இரவு
 • நம்மை ஈன்று பாசம் பிறப்பிக்கிறாள் #அன்னை
 • மனைவியின் வலிகளை கணவன் சுமக்கிறான் மனதிலேயே #ஆதரவு
 • மெட்டின் ஒலிக்கேற்ப அசைந்தாடும் இலையின் நடனம் #காற்று
 •  

 • பாலின் வண்ணம் போல் உந்தன் மழலை சிரிப்பு #அசட்டுத்தனம்
 • நம் மனதில் இடம் கொடுக்க நமக்கு வாழ்வளிக்கிறது #இயற்கை
 • கூச்சலின் இடையே மௌனமாக விளையாடும் வார்த்தைகள் #சொற்கள்
 • சர்க்கரை/உப்பு கரைய நம் தாகம் கரைக்கிறது #தண்ணீர்
 •  

 • நாம் தாளிக்க சத்தத்தை தாளிக்கிறது #கடுகு
 • ஜாலம் கொண்டு ஊற்று #அருவி
 • நாம் கணிக்க நம்மை கணிக்கிறது #மடிகணினி_கேமரா
 • பின்னால் ஓட நம் பின்னால் ஓடிவருவது #காலம்_வினை
 • &nbsp

 • அழுத்தி திருக கரைந்து கூர்மை அடைகிறாய் #கரிக்கோல்
 • நாம் கேட்க்க நம்மையே கேள்வி கேட்பது கேள்விக்குறி #?

6

இரு துளிகள்

நீண்ட நாளுக்கு பின் இந்த ஆடி பெருக்கில் என் துளிகளாய் இரண்டு சொட்டுக்கள் …
மழைத்துளியிடம் 
 உனக்கான உருவம் எது ?
உன்னுள் உருவாகும் வானவில் அழகு
மனதை நனைக்கும்  திருட்டுத் துளியே…
என்னை நனைத்து சிறுபிள்ளை ஆக்கினாய்
உன்னைக்கொண்டு மழை உருவாகும்
அதைகொண்டு பூமி அழகாகும்
முதல் துளியில்
சத்தமில்லை விடைபெறுகையில் இசைச்சாரல் ஆகிறாய் !
என் நினைவுத் துளிகள் ...

என் நினைவுத் துளிகள் …

இரவின் மடியில் வானம்
இரவின் விடியலில்
கோட்டைகள் கட்டவும்
கோட்டையை ரசிக்கவும்
கனவுகள் மெயபடுகின்றன….
வானம் என்னும் பறந்த காட்டில்
நட்சத்திரம் என்னும்  வெளிச்சப்பூக்கள்
மலர்தலே அழகு !
பூத்த விண்மீன் கூட்டத்தால்
தேனியாய் மாறும் என் கண்கள் உங்களை எண்ண
சிறுபிள்ளையாய் எண்ணிக்கொண்டே
கண்கள் கனவு காண …
கனவு கோட்டையிலும் நட்சத்திரப்பூக்களே
அழகே !
இரவு கோட்டைகள் ..

இரவு கோட்டைகள் ..

நிழலின் இரகசியங்கள் !

கனவொளி 

இமைகள் மூடினேன்

என் கனவுலகம் அடைந்தேன் …..

என்மனம் திரையானது

உந்தன் நினைவுகள் ஒளியானது !

கனவு என்னும் ஏட்டில்

கல்லுக்கும் அழகுண்டு !

மனநினைவுகளுக்கும்  இடமுண்டு !

images

மாலை பொழுதின் இதமான நினைவோலை

இதமான தென்றலுடன்

கவி பேசும் பாடலுடன்

மழை துளிச் சாரலுடன்

மென்மை கொண்ட மனதுடன்

கண்ணில் எஞ்சிய ஈரத்துடன்

கலங்கினேன்

உன் நினைவுகளுடன்  !

burning_skies_by_jerry8448-d3hcf7s

வற்றவைத்த சோலை

எந்தன் கண்ணுக்குள்

உன்னைக்கொண்டேன் …

ஆதலால்

கண்ணீரால் உன்னை நனைக்க

விரும்பாமல்

கண்ணீர் என்னும் அருவியை

அந்நொடியே மறைத்து வைத்தேன்…

little-sad-girl-19311202

பொறுத்தருள்க சற்று கடினமான பாதையாக உணர்ந்தால் !

செவிக்கோர் கவி ! ! !

காதல் கண்டு பிடிப்பு ! ! 

 உதட்டில் சிரிப்பொலி அழகு…..

மனதில் ஜதியோசை அமுது….

விழியில் காதல் ரசம் ஏனோ …

அதை செய்தது நானோ…….

உன் நினைவின் பரிசு எனக்கு அதை கொடுக்க மாட்டேன் உனக்கு ! !

255739_338169206306590_1895600885_n

சகோ ! ! 

உயிரின் பாதியாய் என்னில் நீ…

அன்னை முகம் முன் உன்னை அறிந்தேன்…

பிரிவின் போது நொந்து வெந்தன்…

அன்னையின் பிறவி நீஎனச்சொன்னாய்..

தளர்வுகள் எனினும் கை கோர்த்தாய்…

வெற்றிகள் எனினும் தோழ் கொடுத்தாய்…

வாழ்வின் பாதி நீ ஆனாய்…

Previous Older Entries